திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் - கரூரில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்! Dravidian Model 2.0 Government Will Be Formed - CM Stalins Declaration in Karur

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் - கரூரில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்! Dravidian Model 2.0 Government Will Be Formed - CM Stalins Declaration in Karur

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்; அதிமுகவை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) 75-வது ஆண்டு முப்பெரும் விழா, இன்று கரூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026-ஆம் ஆண்டிலும் திமுக வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக மீதான கடுமையான விமர்சனம்

முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக-வின் தற்போதைய தலைமை குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். "அதிமுக தொடங்கியபோது அண்ணாயிசம் கொள்கையெனச் சொன்னார்கள். ஆனால், தற்போது 'அடிமையிசமாக' மாறி, அமித்ஷாவே சரணம் எனச் சரணடைந்துவிட்டார் இ.பி.எஸ் என்று சாடினார்.

திராவிடம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவர் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு எதையும் செய்யாத இ.பி.எஸ்., தற்போது தமிழகத்தை பாஜக-விடம் அடமானம் வைத்துவிட்டார்" எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், பாஜக-வை மக்கள் தூக்கி எறிந்ததால், மத்திய அரசு திமுக மீது வன்மத்துடன் செயல்படுகிறது. மாற்றம், மாற்றம் எனப் பேசியவர்கள் மாறிப் போனார்கள், மறைந்து போனார்கள். எந்த மிரட்டலுக்கும் திமுக அஞ்சாது என முழங்கினார்.

செந்தில் பாலாஜிக்கு பாராட்டு

கரூரில் முப்பெரும் விழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியைப் புகழ்ந்து பேசிய முதலமைச்சர், வெளியே இருந்தால் தூங்க முடியாது எனச் சிலர் செந்தில் பாலாஜியை முடக்கப் பார்த்தனர். அவரை முடக்க முடியுமா? தான் எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக் காட்டுபவர் அவர். கோடு போடச் சொன்னால் ரோடு போட்டுவிட்டாரெனப் பாராட்டினார்.

இதே நாளில் இதே போன்ற கொட்டும் மழையில், வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 ஆண்டுகள் மட்டுமல்ல, நூற்றாண்டுகளையும் காணப்போகிறது" என்று கூறி, தனது பேச்சினை நிறைவு செய்தார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks