2-வது திருமணத்திற்குத் தயாராகும் பிரபல நடிகையா?: பிறந்தநாளில் 'மர்மமான' பதிவு; பரபரப்பான ரசிகர்கள்! Actress Esther Noronha Second Marriage

2-வது திருமணத்திற்குத் தயாராகும் பிரபல நடிகையா?: பிறந்தநாளில் 'மர்மமான' பதிவு; பரபரப்பான ரசிகர்கள்! Actress Esther Noronha Second Marriage

நடிகை எஸ்தர் நோரோன்ஹா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு; விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி மற்றும் இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை எஸ்தர் நோரோன்ஹா, தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பகிரப்போவதாக அவர் குறிப்பிட்டிருப்பதால், அவரது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பாக அது இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

பிரபல பாடகர் நோயலை காதலித்து திருமணம் செய்துகொண்ட எஸ்தர், திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்றார். தமிழில் 'மீன் குழம்பும் மண் பானையும்', 'கேம் ஆப் லோன்ஸ்' மற்றும் 'வெட்டு' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு எஸ்தர் நோரோன்ஹா ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, "கடவுள் எனக்கு என் வாழ்க்கையில் இன்னொரு அழகான ஆண்டைக் கொடுத்திருக்கிறார். எனக்கு அற்புதங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியதற்காக அவருக்கு நன்றி. என் பிறந்தநாளில் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு 'புதிய அறிவிப்பு' உள்ளது, அதை விரைவில் அறிவிப்பேன், காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மர்மமான பதிவு, நடிகையின் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்தச் செய்தி அவரது இரண்டாவது திருமணத்தைப் பற்றியதாக இருக்கலாம் எனப் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks