Online Gambling Banned: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை! மீறினால் ரூ.1 கோடி அபராதம், 3 ஆண்டுகள் சிறை!
பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன்மூலம், இந்த மசோதா சட்டம் ஆகி, ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே, அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டத்தின்படி, தடையை மீறிப் பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டால் ரூ.1 கோடி அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களின் காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுந்து வந்த நிலையில், இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனப் பல்வேறு மாநில அரசுகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார்.
in
இந்தியா