KPY பாலா கோலிவுட்டின் கண்டெண்ட் டிரிவன் ஸ்டாராகிறார் - இயக்குநர் பாலாஜி சக்திவேல்! KPY Bala is a Content-Driven Star" - Balaji Sakthivel Praises 'Gandhi Kannadi' Hero

KPY பாலா கோலிவுட்டின் கண்டெண்ட் டிரிவன் ஸ்டாராகிறார் - இயக்குநர் பாலாஜி சக்திவேல்! KPY Bala is a Content-Driven Star" - Balaji Sakthivel Praises 'Gandhi Kannadi' Hero
நடிகராக பல படங்களில் மனதை வென்று வரும் பாலாஜி சக்திவேல், 'காந்தி கண்ணாடி' திரைப்படம் குறித்துப் பேசியபோதுப் பாராட்டு!

இயக்குநர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல், 'காந்தி கண்ணாடி' திரைப்படம் குறித்துப் பேசும்போது, படத்தின் கதாநாயகன் கே.பி.வை பாலாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

"நான் பல வருடங்கள் இயக்குநராக இருந்துள்ளேன். நடிகர்களின் மூலம் கதாபாத்திரங்கள் உயிர்ப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி. ஆனால், நடிகராக நடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். நான் நடித்த ஒவ்வொரு படமும் சிறந்த இயக்குநர்களின் படைப்பாக அமைந்தது. 'காந்தி கண்ணாடி' படத்தின் கதையை ஷெரீஃப் சொன்னவுடனே, அதன் அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை பிடித்துப்போனதால் உடனே சம்மதித்தேன்" என்று பாலாஜி சக்திவேல் கூறினார்.

மேலும், "இந்தப் படத்தில் கே.பி.வை பாலா நிச்சயமாக கோலிவுட்டின் 'கண்டெண்ட் டிரிவன் ஸ்டார்' (Content Driven Star) ஆகப் போகிறார். அர்ச்சனா ஒரு அபாரமான திறமைசாலி, அவருடன் நடித்தது பெருமையாக இருந்தது. 'காந்தி கண்ணாடி' பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

'காந்தி கண்ணாடி' திரைப்படம்:

ஷெரீஃப் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ஜெய்கிரண் தயாரித்துள்ளார். கே.பி.வை பாலா, நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைக்க, பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வெளியாகிறது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks