தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக (காவல் படைத் தலைவர்) ஜி. வெங்கடராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் சங்கர் ஜிவால், டிஜிபி பணிக்கான கோப்புகளை வெங்கடராமனிடம் கையெழுத்திட்டு ஒப்படைத்தார்.
தமிழக காவல்துறையின் 32வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். புதிய டிஜிபிக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு பொறுப்பு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் ஐ.பி.எஸ்-ஐ நியமித்துள்ளது.
தற்போது தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாகப் பணியாற்றி வரும் ஜி. வெங்கடராமன், சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அவர் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
in
தமிழகம்