கீழே கிடந்த பாட்டிலில் இருந்து குளிர்பானம் குடித்தபோது வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த சோகம்!
கூமாபட்டியைச் சேர்ந்த வீரச்சாமி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியரின் மகன் கோடீஸ்வரன். நேற்று விடுமுறை என்பதால், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கோடீஸ்வரன், கீழே கிடந்த ஒரு பாட்டிலில் இருந்த குளிர்பானத்தைக் குடித்ததாகக் கூறப்படுகிறது.
சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்த சிறுவனை, அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.