லாட்ஜ், ரெசிடென்சிகளில் ஜிஎஸ்டி பில்கள் இல்லை! - அரசுக்குக் கோடிக்கணக்கில் வரி இழப்பு!

லாட்ஜ், ரெசிடென்சிகளில் ஜிஎஸ்டி பில்கள் இல்லை! - அரசுக்குக் கோடிக்கணக்கில் வரி இழப்பு!

லாட்ஜ், ரெசிடென்சிகளில் ஜிஎஸ்டி பில்கள் இல்லை! - அரசுக்குக் கோடிக்கணக்கில் வரி இழப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள லாட்ஜ், ரெசிடென்சி, ரூம்கள் எனப் பல்வேறு தங்கும் விடுதிகளில் ஜிஎஸ்டி விதிமுறைகள் பகிரங்கமாக மீறப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கும் விடுதிகள், வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்ட சரியான ரசீதுகளை வழங்குவதில்லை எனவும், இதன் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ஒரு சில பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மெண்டுகள் கூட, உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக "ரெசிடென்சி" போலச் செயல்பட்டு வருகின்றன. இந்த இடங்களிலும் ஜிஎஸ்டி பில்கள் வழங்கப்படுவதில்லை. 

இத்தகைய விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வரி ஏய்ப்பு, சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுக்க, அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள், குடியிருப்புகளில் திடீர் சோதனைகளை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks