ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு!
ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் ஒருவர் இரண்டு முறை வாக்களித்ததாகக் கூறி, அது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராகுல் காந்தி ஒருவர் இரண்டு முறை வாக்களித்ததாகக் கூறி சில ஆவணங்களைக் காண்பித்தார். இதுகுறித்து விசாரித்த கர்நாடக தேர்தல் ஆணையம், தற்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தி காண்பித்த அந்த ஆவணம், தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்டது அல்ல என்றும், அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தேர்தல் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுகளும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையும் கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளன.