சுதந்திர தின சலுகை: 50 லட்சம் விமான டிக்கெட்டுகள்.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி சலுகை
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், பயணிகளுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, 50 லட்சம் விமான டிக்கெட்டுகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தச் சலுகை இன்று, ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிவரை புக்கிங் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு சலுகையின் கீழ், உள்நாட்டுப் பயணங்களுக்கான டிக்கெட் விலை ₹1,279-இல் இருந்தும், வெளிநாட்டுப் பயணிகளுக்கான டிக்கெட் விலை ₹4,279-இல் இருந்தும் தொடங்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகைத் திட்டமானது, ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சலுகை டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரையிலான பயணங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.