"தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தவெக தலைவர் விஜய்!
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு காரணமாகத் தமிழக ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகம் 10% பங்களிக்கிறது. ஜவுளி, தோல் பொருட்கள், ஆட்டோமொபைல், மின்னணுப் பொருட்கள், கடல் உணவுகள் எனப் பலவகை பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவுக்குப் பாதிப்படைந்துள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாக இருப்பதாலும், இந்தியப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதாலும் இந்த வர்த்தகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.