வங்கக்கடலில் வலுப்பெற்றது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என எச்சரிக்கை!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஆகஸ்ட் 19) முற்பகல்வாக்கில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.