சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை மாவட்ட ஆட்சியர் சந்தித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை மாவட்ட ஆட்சியர் சந்தித்தார்.

சேலம்:

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இன்று சேலம் அரசு மருத்துவமனையில் covid-19 பணியில் ஈடுபட்டு வரும் முன் களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்கள் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள covid-19 சிகிச்சை மையத்தில் Covid19 பாதுகாப்பு உடை அணிந்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோய் பாதித்த நோயாளிகளுடன் சிகிச்சைகள் குறித்தும் சுகாதாரம் மற்றும் உணவு குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? மற்றும் நோயாளிகளின் நோய்த்தொற்றின் தீவிரம் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தமிழக அரசும் தயாராக உள்ளது,மேலும் விரைவில் அனைவரும் நலம் பெற வேண்டும் அதற்கு மருத்துவர்கள் துணிந்து அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks