"கூட்டுறவு சங்கங்களில் பதவி காலம் குறைந்திருப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே" சேலத்தில் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி...!

"கூட்டுறவு சங்கங்களில் பதவி காலம் குறைந்திருப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே"
சேலத்தில் கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி...!

சேலம்:

திட்டமிட்டபடி ஜனவரி 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் தமிழகத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களில் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் சேலத்தில் கல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உறுதி….

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறுகையில்

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டு காலமாக தற்போது உள்ள அரசு குறைத்துள்ளது. குறைத்திருப்பது உள் நோக்கத்தின் காரணமாக தங்களுடைய கட்சி பிரமுகர்களை முன்னிலைப் படுத்தும் நோக்கத்துடன் இந்த பதவிக்காலம் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது என்பது தற்பொழுது 2022 ஒருமுறை தேர்தலும் தற்பொழுது ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் மீண்டும் ஒரு தேர்தல் என இருமுறை தேர்தல் நடத்தப்படும். அப்பொழுது தங்களுக்கு சொந்தமான கட்சி பிரமுகர்கள் கூட்டுறவு சங்கங்களில் இயக்குனராக கைப்பற்றிக் கொள்வார்கள். மீண்டும் மாற்றி ஆட்சி அமைக்கின்ற பொழுது தற்போது ஆட்சியில் உள்ள நபர்களின் திமுக பிரதிநிதிகளை அப்பொழுதும் பதவியில் இருப்பார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என்றார் இது திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகிறேன், ஜனநாயகத்தின் குரல் வளையை ரசிக்கின்ற செயலை இந்த அரசு கைவிட வேண்டும் என்றார்.

மேலும் தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்கவேண்டும். திட்டமிட்டபடி ஜனவரி 21-ஆம் தேதி கல் இறக்கி சந்தைப்படுத்தப்படும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திட்டமிட்டபடி எங்களின் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என்றார். எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவு அளிக்க வேண்டும், இல்லை என்றால் இதில் உள்ள குறைகளை வாதிட எங்களுடன் வாதிட வரவேண்டும் என்றார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திட்டமிட்டபடி ஜனவரி 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என்று கூறினார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks