தமிழகத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,260ஆக உயர்வு..!

சென்னை:

தமிழகத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,87,391ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், * தமிழகத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,87,391ஆக அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,525 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 27,10,288 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,843ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 05 பேரும், அரசு மருத்துவமனையில் 05 பேரும் உயிரிழந்துள்ளனர்.
* சென்னையில் இன்று ஒரே நாளில் 5098 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 582553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 5,83,79,224 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,39,253 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 40,260ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16,27,133 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 6,465 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 11,60,220 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 4,513 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 321 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 252.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks