முதல்வர் ஸ்டாலின் வருகை... திருச்சி, திண்டுக்கல்லில் திடீர் போக்குவரத்து மாற்றம்!.,

திருச்சி;

திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகில் உள்ள கேர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொள்கிறார். இது திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் மற்றும் கட்சியினர் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துகள் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னார்புரம் சென்று சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கல்லிருந்து திருச்சி வரும் வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துகள் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து மன்னார்புரம், TVS டோல்கேட், தலைமை தபால் அலுவலகம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூர் – திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல  வேண்டும்.

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்று வட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!