பிளாக்ஸ்டோன் மற்றும் கார்லைல் நிறுவனங்களுக்கு இடையே மல்லுக்கட்டு- அமெரிக்கத் தொழிலதிபர் கல் சோமானியின் அதிரடி ஆஃபரால் அதிரும் கிரிக்கெட் உலகம்!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஒருபுறம் மைதானத்தில் அதிரடி காட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் கார்ப்பரேட் உலகில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் உரிமையை வெல்லும் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ள சமீபத்தியத் தகவலின்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கையகப்படுத்த சுமார் $1.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹11,956 கோடி) என்ற பிரம்மாண்டமானத் தொகையை அமெரிக்கத் தொழிலதிபர் கல் சோமானி (Kal Somani) ஆஃபர் செய்துள்ளார்.
சர்வதேச முதலீட்டுப் போட்டி:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவதற்கான இறுதிப் பட்டியலில் நான்கு முக்கியத் தரப்புகள் முன்னேறியுள்ளன.
பிளாக்ஸ்டோன் & கார்லைல் ஆர்வம்:
உலகின் முன்னணித் தனியார் முதலீட்டு நிறுவனங்களான Blackstone Inc. மற்றும் Carlyle Group Inc. ஆகியவை இந்த அணியை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இவை ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமின்றி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பங்குகளையும் குறிவைத்து வருகின்றன.
நிபந்தனைகள்:
கல் சோமானி தலைமையிலான குழுவின் ஆஃபர், ஐபிஎல் தொடரின் எதிர்கால ஒளிபரப்பு உரிமம் (Media Rights) மற்றும் அதன் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏன் இந்த மெகா டீல்?:
கடந்த 2008-ஆம் ஆண்டு வெறும் $67 மில்லியனுக்கு வாங்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மதிப்பு, தற்போது சுமார் 20 மடங்கு உயர்ந்துள்ளது. அணியின் தற்போதைய உரிமையாளர் மனோஜ் படாலே (Manoj Badale), தனது முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் இந்தச் சரியான நேரத்தில் பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார். இந்த விற்பனைப் பணிகளை, புகழ்பெற்ற செChelsea மற்றும் Manchester United கால்பந்து அணிகளின் விற்பனையை கவனித்த Raine Group என்ற நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.
இந்த ஒப்பந்தம் இறுதியானால், ஐபிஎல் வரலாற்றிலேயே 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைத் தாண்டிய முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய சாதனை படைக்கும். இது ஒருபுறமிருக்க, ஆர்சிபி (RCB) அணியின் உரிமையாளரான 'டியாகோ' (Diageo) நிறுவனமும் சுமார் 2 பில்லியன் மதிப்பீட்டில் தனது பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளது ஐபிஎல் சந்தையை மேலும் சூடாக்கியுள்ளது.
