RailOne செயலி மூலம் டிஜிட்டல் புரட்சி: க்யூவில் நிற்க இனி தேவையில்லை - கரன்சியைக் குறைக்கும் புதிய திட்டம்!
ரயில் பயணிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே ஒரு 'மாஸ் அப்டேட்' ஒன்றை வெளியிட்டுள்ளது. RailOne மொபைல் செயலி (App) மூலம் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை (Unreserved Tickets) முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் நிலவும் 'ஹெவி ரஷ்' மற்றும் நீண்ட வரிசையைத் தவிர்க்கவும், காகிதமில்லா 'டிஜிட்டல் டிரான்சாக்ஷன்' முறையை ஊக்குவிக்கவும் இந்த அதிரடி அதிரடிச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 'ஸ்பெஷல் ஸ்கீம்' வரும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் தொடங்கி, ஜூலை 14-ஆம் தேதி வரை என மொத்தம் 6 மாதங்களுக்கு 'லைவ்'வில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள 'R-Wallet' பணப்பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 3% 'கேஷ்பேக்' சலுகை எந்த மாற்றமும் இன்றி தொடரும் எனவும் ரயில்வே தரப்பில் 'கிளாரிட்டி' கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதால், 'ஸ்மார்ட்' பயண விரும்பிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
பயணிகள் தங்கள் 'ஸ்மார்ட்போன்' மூலம் எளிதாக டிக்கெட் பெற்று, 'கியூ-ஆர் கோடு' (QR Code) ஸ்கேன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில்வேயின் இந்த 'டிஜிட்டல் புஷ்' முயற்சி, சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
