அரசுப் பள்ளிகள் மூடல், காலிப்பணியிடங்கள் ஏமாற்றம் - திமுக-வின் 'டிராமா'வை கிழித்தெறிந்த விஜய்!
ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், திமுக அரசின் கடந்த நான்கு ஆண்டுகால நிர்வாகத்தைச் சொல்லால் அடித்துத் துவைத்தார். "நாங்கள் எதாவது ஒரு திட்டத்தைச் சொன்னால், உடனே 'நாங்கள் தான் அதைச் செய்துவிட்டோமே' என்று ஆளுங்கட்சி தரப்பில் பதில் சொல்கிறார்கள். ஆனால் எதிலுமே உண்மை இல்லை" என்று தனது உரையைத் தொடங்கினார்.
வடை சுடும் அரசியல்:
"மக்களுக்குச் சொந்த வீடு கட்டித் தருவோம் என்று நாங்கள் சொன்னதற்கு, 'நாங்கள் தான் அனைவருக்கும் வீடு தந்துவிட்டோமே' என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் இங்கே இருக்கிற மக்களிடம் கேட்கிறேன், வாடகை வீட்டில் இருப்பவர்கள் இங்கே யாரும் இல்லையா? எல்லோருக்கும் சொந்த வீடு கிடைத்துவிட்டதா?" என்று விஜய் கேட்டபோது, கூட்டத்தில் இருந்த மக்கள் ஆவேசமாக "இல்லை" என்று முழங்கினர். "வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் ஒன்றும் திமுக கிடையாது" என்று அவர் நச் என்று பதிலடி கொடுத்தார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மோசடி:
கல்வித் துறையில் திமுக அரசு நடத்தி வரும் 'டிராமா'வைச் சுட்டிக்காட்டிய விஜய், "குடும்பத்தில் ஒருவர் பட்டதாரி என்று அவர்கள் பெருமை பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் பள்ளிகளிலேயே இடைநிற்றல் (Drop-outs) யாருடைய ஆட்சியில் அதிகம்? சுமார் 207 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று விளம்பரம் செய்வது என்ன நியாயம்?" என்று அதிரடியாகக் கேட்டார். மேலும், லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள், இதுவரை ஒரு லட்சம் இடங்களையாவது நிரப்பினார்களா? மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று அவர் சரமாரிக் கேள்விகளை எழுப்பினார்.
சட்டம் ஒழுங்கு குறித்த நேரடி விமர்சனம்:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "பெண்கள் பாதுகாப்பு பற்றி அரசு சொல்லும் மகா பொய்களை மக்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். இதுதான் நிஜம். எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் ஒருபோதும் சமரசம் இருக்காது" என்று உறுதிபடத் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் தான் பேசிய கருத்துகளைச் சிதைத்து, அவதூறு பரப்பும் கும்பல்களுக்குப் பயப்படத் தேவையில்லை என்றும், மக்கள் சக்தியே தவெக-வின் உண்மையான பலம் என்றும் கூறித் தனது அனல் பறக்கும் பேச்சின் இந்தப் பகுதியை நிறைவு செய்தார். நிறைவாக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களை பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் அறிவுத்தினார்.
கூட்டத்தின் நிறைவில் தவெக-வின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய்க்கு செங்கோல் வழங்கி சிறப்பித்தார்.

.jpg)