நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்: டி.எஸ்.பி.க்கு எதிராகக் கைது உத்தரவிட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை! District Judge P. U. Semmal Suspended After Ordering Arrest of Kanchipuram DSP.

உச்ச நீதிமன்றத் தள்ளுபடி: நீதிபதி செம்மல் மேல்முறையீடு நிராகரிப்பு – பணியிடை நீக்கம் நடவடிக்கை!

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராகக் கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி,  காவல் துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ,  டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்கப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், மாவட்ட நீதிபதிக்கு எதிராக, நிர்வாக ரீதியில் மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவாக, விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையைச் சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு மற்றும் நீதிபதிகள் பணியிட மாற்றக் குழு அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்துச் செம்மல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில், உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்குப் பிறகு நீதிபதி செம்மலை பணியடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk