கரூரில் மழைக்கு அஞ்சாத சிபிஐ கண்காணிப்பு குழு: கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி ஆய்வு! CBI Monitoring Committee, Led by Retired Supreme Court Judge Ajay Rastogi, Conducts Inspection in Karur

அஜய் ரஸ்தோகி தலைமையில் சட்டப்பூர்வ ஆய்வு: நேரில் சந்தித்து மனுக்கள் அளித்த பொதுமக்கள், அரசியல் கட்சியினர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிபிஐ கண்காணிப்புக் குழுவினர், நேற்று கரூர் வருகை தந்து அதிரடி ஆய்வை மேற்கொண்டனர். மழை கொட்டிப் பெய்த போதும், குடைகளைப் பிடித்துக்கொண்டு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ கண்காணிப்புக் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர், நேற்று காலை 10:30 மணி முதல் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரையும் நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்றனர்.

பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், வணிகர் சங்கத்தினர், தவெக மாவட்டச் செயலாளரின் மனைவி உட்பட சுமார் 30 பேர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

மனுக்கள் பெரும் நேரம் முடிந்ததால் நேற்று சுமார் 7 பேர் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், இன்று அவர்களை வரச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10:30 மணியளவில் சிபிஐ அலுவலகம் வந்த கண்காணிப்புக் குழுவினர், சிறிது நேரத்திலேயே விசாரணைக்கான அடுத்த கட்டமாக, கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதிக்குச் சென்று நேரடி ஆய்வை மேற்கொண்டனர். மேலும், தவெக கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்த லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, பேருந்து நிலையம் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்கள் தீவிர ஆய்வு நடத்தினர். இந்த சட்டப்பூர்வ ஆய்வு, கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மையை விரைவில் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk