பொருளாதார நெருக்கடி: ஒரே நாளில் ₹4,000 கிடுகிடு உயர்வுடன் வெள்ளி விலை ₹2 லட்சத்தை நெருங்குகிறது!
கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வந்த நிலையில், தற்போது தொடர் ஏற்றத்தைக் கண்டு வந்த தங்கம் விலை இன்று (டிசம்பர் 1) புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதே சமயம், வெள்ளி விலையும் வரலாறு காணத அளவில் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ₹720 என்ற கிடுகிடு உயர்வைப் பதிவு செய்துள்ளதால், தங்கத்தின் விலை ₹97,000-ஐ நெருங்குகிறது. இந்த சமகால விலையேற்றம், நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) ₹720 உயர்ந்து, ₹96,560க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹90 உயர்ந்து, ₹12,070-ஐ எட்டியுள்ளது. சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள தடாலடி மாற்றங்களும், இந்தியப் பொருளாதாரத்தின் சமகால நிலையும் இந்த கணிசமான உயர்வுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலையைப் போலவே, வெள்ளியின் விலையும் இன்று பயங்கர ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹4,000 உயர்ந்து, ₹1,96,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ₹4 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ₹196க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையின் இந்த மின்னல் வேக ஏற்றம், பணவீக்கம் மற்றும் சர்வதேச நிதி நெருக்கடிகள் குறித்த அச்சத்தை வலுப்படுத்துவதாக நிதி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
.png)