எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: டிசம்பர் 15 முதல் மூன்று மாநிலங்களுக்கான விருப்ப மனு விநியோகம்.
வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்காக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள், வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்சி அலுவலகத்தில் இந்த விருப்ப மனு விநியோகம் நடைபெறும் என்றும், விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து டிசம்பர் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
