கரூர் விவகாரம் தொடர்பான ரீல்ஸ் பார்த்ததால் தூண்டுதல்: மதுபோதையில் மிரட்டல் விடுத்த கன்னியாகுமரி இளைஞர் ஒப்புதல்!
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், முகமது ஷபிக் என்ற இளைஞரைச் சென்னை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட முகமது ஷபிக், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், தற்போது பல்லாவரத்தில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
போலீசாரின் விசாரணையில், இந்தச் சம்பவம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. முகமது ஷபிக் மதுபோதையில் இருந்தபோது, சமூக வலைதளத்தில் (ரீல்ஸ்) கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வீடியோக்களைப் பார்த்துள்ளார். அதன் தூண்டுதலின் பேரில் அவர் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகரின் வீட்டிற்கு விடுக்கப்பட்ட இந்த பொய்யான மிரட்டல் சம்பவம், சமூக வலைதளங்களின் மோசமான தாக்கம் குறித்துப் பேசுபொருளாகியுள்ளது.
