கேமரா முன் முதன்முதலில் நின்ற நாள் முதல் இன்றுவரை: ஒவ்வொரு ஷாட்டும் என்னைக் காயத்தை ஆற்றியது, என்னை உருவாக்கியது!
தென்னிந்தியத் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, தான் திரைப்படங்களில் அடியெடுத்து வைத்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இந்தப் பதிவு, இந்த நீண்ட காலப் பயணத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றியையும் அனுபவங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
திரைப்படங்கள் தான் என் காதலாக இருக்கும் என அறியாமல், நான் முதன்முதலாக கேமராவின் முன் நின்று இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு Frame-மும், ஒவ்வொரு Shot-ம், ஒவ்வொரு அமைதியும் என்னைச் செதுக்கியது, காயத்தை ஆற்றியது, என்னை உருவாக்கியது. இதற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 22 ஆண்டுகாலப் பயணத்தில் அவருக்குக் கிடைத்த வெற்றி மற்றும் அனுபவங்களை இந்தப் பதிவு வெளிப்படுத்துகிறது.
