Deepavali Special Bus Service: தீபாவளிப் பண்டிகை.. பயணிகள் வசதிக்காகச் சென்னையில் 4 நாட்களுக்கு 275 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கம்! 275 Feeder Buses to Operate for 4 Days in Chennai

நாளை (அக். 16) முதல் 19-ஆம் தேதி வரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் முனையங்களுக்குப் பேருந்துகள்!

சென்னை, அக்டோபர் 15: வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, நாளை (அக். 16) முதல் வரும் 19-ஆம் தேதி வரை 4 நாட்களுக்குக் கூடுதலாக 275 சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்தப் பேருந்துகள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்துப் பின்வரும் முக்கியப் பேருந்து முனையங்களுக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல இயக்கப்படும்:

கிளாம்பாக்கம் பேருந்து முனையம்

கோயம்பேடு பேருந்து முனையம்

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

பயணிகள் இந்தச் சிறப்புப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk