ராணிப்பேட்டையில் அதிர்ச்சி: பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் கல்லூரி மாணவிகள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? College Students Travel Dangerously on Footboard of Government Buses in Walajapet; Public Demands DC's Intervention.
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி: பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் கல்லூரி மாணவிகள் – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?
வாலாஜா பேருந்து நிலையத்தில் ஆபத்தான பயணம் வாடிக்கையாக மாறிய அவலம்; பயணிகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை.
ராணிப்பேட்டை, வாலாஜா, அக்டோபர் 5, 2025: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் கல்லூரி மாணவிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத இந்த நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பேருந்துகளில் அதிக நெரிசல் காரணமாகவோ அல்லது ஓட்டுநர், நடத்துநரின் அலட்சியப் போக்கினாலோ மாணவிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது வாடிக்கையாகவே மாறிவிட்டது. ஆபத்தை உணராத இந்த விபரீதப் பயணத்தைக் கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் மௌனம் சாதிப்பது குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்தப் படிக்கட்டுப் பயண அவலத்துக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண மாவட்ட ஆட்சியர் உடனடியாகப் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்

