திருநெல்வேலி, கடலூர் சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை; பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு!
போலி பத்திரப்பதிவிற்கு உடந்தையாக இருந்ததாகவும், வங்கி முடக்கிய சொத்துக்களைப் பதிவு செய்ததாகவும் இரண்டு சார் பதிவாளர்களை அதிரடியாகச் சஸ்பெண்ட் செய்து, பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் சார் பதிவாளர் காட்டு ராஜா, போலி பத்திரப்பதிவிற்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் புகாரில் சிக்கியுள்ளார். அதேபோல், கடலூர் சார் பதிவாளர் சுரேஷ், வங்கி முடக்கிய சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இருவரும் தங்கள் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரப்பதிவுத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் களைந்து, வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சஸ்பெண்ட் நடவடிக்கை, இதுபோன்ற தவறுகளில் ஈடுபடும் மற்ற அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.