விஜய் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த சீமான்; காங்கிரஸ் தலைவர் கேட்ட நக்கல் கேள்வி: சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ!
த.வெ.க. தலைவர் விஜய் கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேரடியாகச் சந்தித்து பகடி செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீப நாட்களாக, நடிகர் விஜயின் பொதுக்கூட்டங்களில் கூடும் கட்டுக்கடங்காத கூட்டம் குறித்து சீமான் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த சீமான், அதே இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைச் சந்தித்தார்.
அப்போது, சீமானைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே செல்வப்பெருந்தகை, அணில் பிரச்சினையெல்லாம் வேகமாக போகின்றதா?” என்று நக்கலாகக் கேட்டுள்ளார். செல்வப்பெருந்தகையின் இந்தக் கேள்விக்குச் சீமான் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டவர்கள் அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.