ரூ. 1.50 கோடி அபராதம்; நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை!
சென்னை, செப்டம்பர் 23: வருமான வரிச் சட்டத்தின்படிதான் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. அபராதத்தை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் விஜய், வருமான வரித்துறை தனக்கு விதித்த ரூ. 1.50 கோடி அபராதத்தை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
வருமான வரித்துறை தரப்பு, வருமான வரிச் சட்டப்படிதான் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.