முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் வழக்கு தள்ளுபடி: நடிகை சாந்தினிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஏன் மனு செய்யவில்லையென நீதிபதிகள் கேள்வி!


சென்னை, செப்டம்பர் 23: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி நடிகை சாந்தினி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சமரசம் குறித்துப் போதிய விளக்கம் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடிகை சாந்தினி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி சாந்தினி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விசாரணையின்போது, வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடிகை சாந்தினி தரப்பு இதை மறுத்தது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், "உயர் நீதிமன்றத்தின் சமரச உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?" எனக் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு நடிகை தரப்பு சரியான பதில் அளிக்காததால், மணிகண்டனின் ஜாமீனை எதிர்த்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!