இந்திய ராணுவத்தின் துணிச்சலான மீட்பு! - இமயமலையில் 17,000 அடியில் சிக்கிய கொரிய தம்பதி; இரவில் நடந்த த்ரில்லான மீட்பு!
பனி மூடிய மலை உச்சியில் நடந்த மீட்புப் பணிக்குக் குவிந்துவரும் பாராட்டுகள்; உலக அளவில் இந்தியாவின் மனிதாபிமானம் வெளிப்பட்டது!
லடாக்: இமயமலையில் உள்ள லடாக், கோங்மாரு லா கணவாய் பகுதியில் 17,000 அடி உயரத்தில் சிக்கிய தென் கொரிய தம்பதியை, இந்திய ராணுவ விமானப்படை இரவு நேரத்தில் துணிச்சலாக மீட்டது. இந்த வீர சாகச மீட்பு நடவடிக்கை, உலக அளவில் பெரும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
செப். 4-ஆம் தேதி இரவு 8:05 மணியளவில், கடும் பனிப்பொழிவு காரணமாக அந்தத் தம்பதியினர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த இந்திய விமானப்படை, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணியைத் தொடங்கியது. பனி மூடிய மலை உச்சியில் உள்ள சவால்களையும், அடர்ந்த இருளையும் கடந்து, விமானப்படையின் ஹெலிகாப்டர், சரியாக இரவு 9:15 மணிக்கு அவர்களை வெற்றிகரமாக மீட்டது. இந்திய ராணுவத்தின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, அவர்களின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.