அதிமுகவில் பதவி பறிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கருத்துத் தெரிவித்துள்ளார். கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அவரது பதில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர், “எனது பதவி பறிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
கட்சியில் பிரிந்து சென்றவர்களை 10 நாட்களில் பழனிசாமி ஒருங்கிணைக்க வேண்டும் எனச் செங்கோட்டையன் அண்மையில் கெடு விதித்திருந்தார். அதன் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது இந்த எதிர்பாராத பதில் அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.