விசிக பிரமுகர்களைத் தாக்கிய வழக்கில் சென்னை காவல்துறை நடவடிக்கை; காவல் ஆணையர் அருண் உத்தரவு.
டிஜிபி அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பிரமுகர்களைக் கத்தியால் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி மீது, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அருண் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு விசிக பிரமுகர்களைக் கத்தியால் தாக்கியதாக 'ஏர்போர்ட்' மூர்த்தி மீது மெரினா போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவைத் தடுக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், 'ஏர்போர்ட்' மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கச் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
in
தமிழகம்