டிஜிபி அலுவலக மோதல்: ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விசிகவினர் மீது வழக்கு பதிவு!
செருப்பால் தாக்கப்பட்டதாக ஏர்போர்ட் மூர்த்தி புகார் அளித்த நிலையில், அவர் கத்தியால் தாக்கியதில் விசிக நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து, இரு தரப்பினரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஏர்போர்ட் மூர்த்தி அளித்த புகார்: தன்னைத் தாக்கிய விசிக நிர்வாகிகள் ஐந்து பேர் மீது, ஆபாசமாகப் பேசுதல் மற்றும் காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசிக நிர்வாகிகள் அளித்த புகார்: ஏர்போர்ட் மூர்த்தி கத்தியால் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது ஆபாசமாகப் பேசுதல், தாக்குதல் நடத்துதல் மற்றும் கொடுங்காயம் ஏற்படுத்துதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த விசிக நிர்வாகி திலீபன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருதரப்பு புகார்களின் அடிப்படையில் மெரினா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
