வாணியம்பாடி மரப்பொருள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததால் அப்பகுதி மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீ விபத்தில் குடோனில் இருந்த இயந்திரங்கள், ஃபர்னிச்சர்கள் மற்றும் தயாரிப்புக்கு வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
in
தமிழகம்
