CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! CBSE 10th and 12th Board Exam 2026 Time Table Released

பத்தாம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் அறிவிப்பு; பிப்ரவரி 17-ல் தேர்வுகள் தொடக்கம்!

சென்னை, செப். 25: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (2026):

CBSE 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டப் பொதுத் தேர்வு: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வு: 2026ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (2026):

CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கட்டத் தேர்வுகள் முடிந்த 10வது நாளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும் எனவும் CBSE நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!