மின்னஞ்சல் மூலம் வந்த மர்ம மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் சோதனை: இறுதியில் அம்பலமான திடுக்கிடும் தகவல்!
நேற்று இரவு, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம மின்னஞ்சல் ஒன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது. இந்தச் செய்தி கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல மணிநேரம் தீவிர சோதனை நடைபெற்றது. முடிவில், வெடிகுண்டு எதுவும் இல்லாதது உறுதியானது. இந்த மிரட்டல் வெறும் போலித் தகவல் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, மர்ம மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
in
தமிழகம்