சொத்துகளைப் பறித்து தாயை வீட்டை விட்டு விரட்டிய மகன்: நாகையில் பரபரப்பு! Son drives mother out of home: A stir in Nagapattinam

மகனும், மருமகளும் மோசடி செய்ததாக மூதாட்டி புகார்; நாகை ஆட்சியரிடம் மனு!

நாகப்பட்டினம், செப்டம்பர் 23: தனது சொத்துக்களைப் பறித்துக் கொண்டு, வீட்டை விட்டு விரட்டிய இளைய மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம், கீழ்ப்பிடாகையைச் சேர்ந்த முத்துலட்சுமி (75) என்ற மூதாட்டி, தனது கணவர் இறந்து 20 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது இளைய மகனும், மருமகளும் தங்களைப் பராமரிப்பதாகவும், மருத்துவத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதாகவும் கூறி, அவரது சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

சொத்துகளைப் பதிவு செய்த பிறகு, அவர்கள் தன்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டதாக மூதாட்டி முத்துலட்சுமி வேதனையுடன் தெரிவித்தார். தனக்கு வாழ்நாள் பராமரிப்பு அளிப்பதாகக் கூறி ஏமாற்றிய மகனும், மருமகளும் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது சொத்துகளை மீட்டுத் தருமாறு அவர் நாகை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!