பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து விலகிய அண்ணாமலை; சேலத்தில் ரசிகர் மன்றம் துவங்கிய பாஜக பிரமுகர் - அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!
சேலம், செப்டம்பர் 26: பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கும் அண்ணாமலைக்கு, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று துவக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் தங்கமணி, இந்த ரசிகர் மன்றத்தை அமைத்துள்ளார். உனக்குள் ஒரு லட்சியத்தை உருவாக உன்னை உருவாக்கு என்ற தாரக மந்திரத்துடன் இந்த மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல, அண்ணாமலைக்கும் ரசிகர்கள் உள்ளதைக் காட்டும் வகையில் இந்த மன்றம் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் துவக்கப்பட்டிருப்பது, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த பல யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.