காலாவதியான பொருட்கள் விற்பனை; மூன்று கடைகளுக்கு அதிரடி சீல் - பொதுமக்கள் அதிர்ச்சி!
குமாரபாளையம், செப்டம்பர் 25: குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த பேக்கரிகளில், காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததைக் கண்டறிந்து, மூன்று கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசியப் புகார் கிடைத்தது. புகாரைத் தொடர்ந்து, குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இணைந்து பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, பல கடைகளில் பன்கேக் மற்றும் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்ட குமாரபாளையம் பகுதியிலுள்ள சுமார் மூன்று கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக சீல் வைத்தனர். இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
in
தமிழகம்