மடப்புரம் கோவில் காவலாளி மரணம்; சாட்சிகளின் வீடுகளில் ரகசிய லென்ஸ் பொருத்தம்!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், ஐந்து போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சாட்சிகளின் வீடுகளில் சிசிடிவி, அலாரம், ரகசிய லென்ஸ் உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களைப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் ஐந்து போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின்
முக்கிய சாட்சிகளுக்கு மிரட்டல்கள் வரலாம் என அஞ்சிய போலீசார், அவர்களுக்குப்
பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, சாட்சிகளின் வீடுகளில்
சிசிடிவி கேமராக்கள், அலாரம், கதவு, மற்றும் ரகசிய லென்ஸ்கள் உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களைப்
பொருத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கை,
சாட்சிகள்
அச்சமின்றி வழக்கில் ஒத்துழைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.