அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி: "அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்" என்று வலியுறுத்தி, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனியில் இருந்து கம்பம் நோக்கிச் சென்று கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை, தொண்டர்கள் திடீரென வழிமறித்து கோஷங்களை எழுப்பினர். அ.தி.மு.க.வை பிளவுபடாமல் ஒருங்கிணைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, போலீசார் சிலரை குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.