கேரளா மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து விபத்து; தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதால் படக்குழுவினர் சோகம்!
மூணாறுக்குஅருகில் உள்ள ஒரு மலைப் பிரதேசத்தில் அதிரடி சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ஜீப்பில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சில கலைஞர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உடனடியாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து படப்பிடிப்புக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்துத் தற்போது வரை தெளிவான தகவல் இல்லை. படக்குழுவினர், நடிகர் ஜோஜு ஜார்ஜ் விரைவில் குணமடைய வேண்டிப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.