அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு; வீல் சேர் இருந்தும் பயன்படுத்தவில்லையா? - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த 80 வயது மூதாட்டி ஒருவரை, அவரது மகன் கழிவறைக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்குச் செல்லும் காட்சி வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பலரின் மனதையும் உலுக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அரக்கோணம் அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதில், மருத்துவமனையில் வீல் சேர்கள் போதுமான அளவில் இருந்ததாகவும், ஆனால் மூதாட்டியின் மகன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது.