மத்திய பிரதேசம் ஜபல்பூரில் கர்ப்பிணிக்கு 5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தையைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
மத்தியப் பிரதேசம்: விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு 5.2 கிலோ எடையுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் மருத்துவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பொதுவாக, சராசரியாக 2.5 முதல் 3.5 கிலோ எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், இக்குழந்தை அசாதாரணமான எடையுடன் பிறந்துள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர், “எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார்” என்று கூறி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வளவு எடையுள்ள குழந்தை பிறப்பது அரிதானது என்றும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த அசாதாரண நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
in
இந்தியா