கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: மகளிர் உலகக் கோப்பை டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம்!
சென்னை: கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, இந்தியாவில் நடைபெறும் மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகக் கோப்பை லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. இதில், GPAY பயனர்களுக்கு டிக்கெட் வாங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் Tickets.cricketworldcup.com
என்ற இணையதள முகவரிமூலம் இந்த டிக்கெட்டுகளை வாங்கலாம். மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கவும், அதிக பார்வையாளர்களை ஈர்க்கவும் இந்தக் குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
in
விளையாட்டு