தாய் கொலை, தந்தை சிறையில் இருந்த நிலையில் சோகம்; தந்தை பரோலில் வந்ததால் இன்று இறுதிச்சடங்கு!
சென்னை டி.பி. சத்திரம் பகுதியில், கழிவறையில் தவறி விழுந்து
படுகாயமடைந்த 4 வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.பி.
சத்திரம், 25ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.
இவருக்கு
மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2023ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட
நிலையில், சதீஷ்குமார் ஒரு கஞ்சா வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளார்.
இதனால், குழந்தைகள் அவரது பாட்டியான தனலட்சுமியிடம் வளர்ந்து
வந்தனர்.
சம்பவம் நடந்தது என்ன?
கடந்த
செப்டம்பர் 20ஆம் தேதி, சதீஷ்குமாரின் இளைய மகன் ஸ்ரீ சாய் (4)
என்பவரைக்
கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர், குழந்தையைக்
குளிப்பதற்காகக் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சிறுவன்
கழிவறையில் இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டில் ஏறி அமர்ந்தபோது தவறி விழுந்து, தலையில் பலத்த
காயம் ஏற்பட்டது.
உடனடியாகச்
சிறுவன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (செப். 21) சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தான்.
தந்தை பரோலில் வந்ததால்.
உயிரிழந்த
சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்
வைக்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை சதீஷ்குமார் பரோலில் இன்று வந்துள்ளதால்,
இறுதிச்சடங்குகள்
நடைபெற உள்ளன. இந்தச் சோகமான சம்பவம் குறித்து டி.பி.
சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.