2026 தேர்தலுக்கான பிரசாரக் களம்: களத்தில் இறங்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்!
சென்னை: 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் களத்தில் பல அரசியல் கட்சிகளும் மும்முரமாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிரசாரப் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
விஜய் தனது பிரச்சாரப் பயணத்தை வரும் செப்டம்பர் 13, 2025 அன்று திருச்சியில் தொடங்க உள்ளார். அதைத் தொடர்ந்து, அரியலூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய்யின் இந்தப் பிரசாரப் பயணம், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.