கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் பெரும் பரபரப்பு; மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள மணலூர் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தற்போது, உணவு வழங்கிய விவகாரம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.