சென்னையில் போதைப்பொருள் கும்பல் கைது: நடன கலைஞர், மாணவர்கள் உட்பட 10 பேர் சிக்கினர்! Chennai Drug Racket Busted: Dancer, Students Arrested

டார்க் வெப் மூலம் போதைப்பொருள் விற்பனை; கூலி, கோட் படங்களுக்கு நடனமாடிய கலைஞர் கைது!

சென்னையில் 'டார்க் வெப்' எனப்படும் ரகசிய இணையதளம் மூலம் போதைப்பொருள் வாங்கி விற்பனை செய்த நடன கலைஞர், கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் ஒரே இரவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக் நகரில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வடபழனியைச் சேர்ந்த யுவராஜ், பிரவீன், பரத், லோகேஷ் குமார், விக்னேஷ்வரன், சம்பத்குமார், ரகு, அர்ஜூன் உள்ளிட்ட 10 பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 7 கிராம் மெத்தபெட்டைமைன், 2 கிராம் கெட்டைமைன், 106 போதை ஸ்டாம்ப்கள் மற்றும் 10 கிராம் ஓஜி கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்ட பிரவீன் என்பவர் சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றி வருவதாகவும், ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் 'சிக்கடு' பாடலுக்கும், விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் இரண்டு பாடல்களுக்கும் நடனமாடியுள்ளதும் தெரியவந்தது. நடன கலைஞர் பிரவீன் பிரபல கல்லூரியில் படித்தவர் என்பதும், அவரிடம் போதைப்பொருள் கேட்கும் நபர்களுக்கு நண்பர்களான பரத் மற்றும் பிரபாகரன் மூலமாக கஞ்சா விநியோகித்ததும் அம்பலமானது.

இந்தக் கும்பலில் உள்ள அர்ஜூன் என்பவர் தான் 'டார்க் வெப்' மூலமாக போதை ஸ்டாம்புகளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட கலைச்செல்வன் தனியார் கல்லூரியில் மாணவராகவும், கதிர்வேல் என்பவர் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவராகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!